ADDED : ஜூன் 19, 2026 10:20 PM
அ நிறம் | அளவு
சென்னை: பெட்ரோல், டீசல், ‘காஸ்ʼ விலை உயர்வை குறைக்க வேண்டும். நான்கு தொழிலாளர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். கிராமத்தில், 200 நாட்கள் வேலை திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிராட்வே, என்.எஸ்.சி., போஸ் சாலை குறளகம் அருகே, மார்க்.கம்யூ., கட்சி சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அக்கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஆர்ப்பாட்டத்திற்கு வந்தோருக்கு குடைகள் வழங்கப்பட்டன. ஆர்ப்பாட்டம் முடிந்த பின் குடைகள் திரும்ப பெற்றதால், கட்சி உறுப்பினர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
