ADDED : ஜூன் 15, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டியம்பாக்கம், :ஒட்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மனோஜ், 25. 'ஆன்லைன் டெலிவரி' வேலை செய்கிறார். ஒட்டியம்பாக்கத்தில் உள்ள கல் குவாரி அருகே, தன் நண்பர் ஹுசைன் என்பவருடன் சேர்ந்து, மனோஜ் நேற்று மதியம் மது அருந்திஉள்ளார்.
பின், மது போதையில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து கல் குவாரியில் தேங்கி நின்ற மழை நீரில் குளிக்க சென்றுள்ளனர்.
நீச்சல் தெரியாத மனோஜ், மதுபோதையில் ஆழமான இடத்திற்கு சென்றுள்ளார்.
இதை பார்த்த நண்பர் ஹுசைன் கத்தி கூச்சலிட்டுள்ளார். அங்கு யாரும் உதவிக்கு இல்லாததால் மனோஜ் நீரில் மூழ்கினார்.
மேடவாக்கம் தீயணைப்பு துறையினர், மனோஜ் உடலை தேடி வருகின்றனர்.

