/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேடவாக்கம் காவல் நிலையம் கமிஷனர் திறப்பு
/
மேடவாக்கம் காவல் நிலையம் கமிஷனர் திறப்பு
ADDED : ஜூலை 19, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேடவாக்கம், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் கீழ் உள்ள பள்ளிக்கரணை காவல் நிலையத்தை, நிர்வாக காரணங்களுக்காக பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அதிலிருந்து மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் ஊராட்சிகளை உள்ளடக்கிய, 10.27 ச.கி.மீ., பரப்பளவு உடைய மேடவாக்கம் காவல் நிலையம், கோவிலம்பாக்கத்தில், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக், நேற்று திறந்து வைத்தார்.
தாம்பரம் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் கவுதம் கோயல், உதவி கமிஷனர் ஜெய்சில் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேடவாக்கத்துடன் மொத்தம் 22 காவல் நிலையங்கள், தாம்பரம் மாநகர காவல் எல்லையில் உள்ளன.