/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாவுச்சத்து உணவை தவிர்க்க மருத்துவ கருத்தரங்கில் அறிவுரை
/
மாவுச்சத்து உணவை தவிர்க்க மருத்துவ கருத்தரங்கில் அறிவுரை
மாவுச்சத்து உணவை தவிர்க்க மருத்துவ கருத்தரங்கில் அறிவுரை
மாவுச்சத்து உணவை தவிர்க்க மருத்துவ கருத்தரங்கில் அறிவுரை
ADDED : செப் 13, 2024 12:38 AM
சென்னை, சென்னையில் உள்ள, 'மரைன் கன்டெய்னர் சர்வீசஸ்' நிறுவன பணியாளர்களுக்கு, இயற்கை மருத்துவ முறை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, நேற்று நடந்தது.
கருத்தரங்கில், சென்னை யுவா இயற்கை மருத்துவமனை தலைவர் யுவபாரத் பேசியதாவது:
இயற்கை மருத்துவம் என்பது, மருந்தில்லாத உணவு முறைகளை கொண்டது.
உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய் பாதிப்புக்கு, உணவு முறைகளே முக்கிய பங்காற்றுகின்றன. வெள்ளை அரிசி சாதம், கோதுமை மாவு, பால் ஆகிய உணவு முறைகளால், பாதிப்பு உள்ளது. குறிப்பாக, அரிசி மற்றும் கோதுமை உணவில், 80 சதவீதம் சர்க்கரை உள்ளது.
உடல் உழைப்பு குறைவாக உள்ள, அதாவது, 30 சதவீத உடல் உழைப்பு உள்ளவர்கள், அரிசி, கோதுமை உணவு சாப்பிட்டால், செரிமானம் ஆகாமல் உடலில் தேங்கி, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல தொற்றா நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதனால், நார்ச்சத்து, கொழுப்பு நிறைந்த உணவுகள், பச்சை நிற காய்கறிகள் ஆகியவற்றுடன், 20 சதவீத மாவுச்சத்து உணவுகளை உட்கொண்டால், தொற்றா நோய்கள் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கு ஏற்பாடுகளை, மரைன் கன்டெய்னர் சர்வீசஸ் நிறுவனத்தைச்சேர்ந்த சுபா ரங்கராஜன் செய்திருந்தார்.