ADDED : ஜூலை 15, 2024 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பெரும்பாக்கம், நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை 80 அடி அகலம் உடையது. இங்குள்ள வீடு மற்றும் தெருக்களை, ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், அப்பணியை மாநகராட்சி செய்கிறது; குடியிருப்பு வாரியம் நிதி வழங்குகிறது.
ஆனால், சாலையோரம் உள்ள குப்பையை யாரும் அகற்றுவதில்லை. அதில் மருத்துவ கழிவுகள் மூட்டையாக குவிக்கப்பட்டிருந்தன. இதனால், தொற்று பாதிப்பு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, பெரும்பாக்கம் ஊராட்சி சார்பில் மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டன. இதன்பின், சாலையோரம் சுத்தமானது.