/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மெட்ரோ' குழு டிக்கெட் கவுன்டர்களில் நிறுத்தம்
/
'மெட்ரோ' குழு டிக்கெட் கவுன்டர்களில் நிறுத்தம்
ADDED : மார் 01, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் விற்கும் கவுன்டர்களில், 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவினர் பயணத்திற்கு, 10 சதவீதம் தள்ளுபடியுடன், காகித டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த குழு பயண காகித டிக்கெட், இன்று முதல் கவுன்டர்களில் வழங்கப்படாது. டிஜிட்டல் டிக்கெட் மாறுவதை எளிதாக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், அதே குழு டிக்கெட்டை பயணியர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மொபைல்போன் செயலி வாயிலாக, 20 சதவீதம் கட்டண சலுகையுடன் பெற்றுக் கொள்ளலாம்.