/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமைச்சர் அறிவிப்பு கண்துடைப்பு பெருங்குடியில் மாடுகளால் பீதி
/
அமைச்சர் அறிவிப்பு கண்துடைப்பு பெருங்குடியில் மாடுகளால் பீதி
அமைச்சர் அறிவிப்பு கண்துடைப்பு பெருங்குடியில் மாடுகளால் பீதி
அமைச்சர் அறிவிப்பு கண்துடைப்பு பெருங்குடியில் மாடுகளால் பீதி
ADDED : ஜூலை 02, 2024 12:49 AM

சென்னை நகரில், மாடுகளால் உயிர் பலி, படுகாயம் ஏற்பட்டு வரும் நிலையில், சாலையில் திரியும் மாடுகள் பிடிபட்டால் முதல் முறை, 5,000 ரூபாய், இரண்டாம் முறை, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாலையில் திரியும் மாடுகள் மூன்றாவது முறை பிடிபட்டால் ஏலம் விடப்படும் என, சட்டசபையில், அமைச்சர் நேரு அறிவித்தார்.
எனினும், மாட்டு உரிமையாளர்கள் கண்டுகொள்வதாக இல்லை. வழக்கம் போல சாலையிலே மாடுகளை திரிய விடுகின்றனர்.
பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கத்தில் திரியும் 100க்கும் மேற்பட்ட மாடுகள், பால் கறவை நேரத்தை தவிர பெரும்பாலும் சாலையில் திரிகின்றன.
இரவில் சாலையிலே படுத்து உறங்குவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைவது தொடர்கிறது.
அமைச்சர் அறிவிப்பை காற்றில் பறக்க விட்டுள்ளதோடு, மாடுகளின் உரிமையாளர்கள் மீது பெருங்குடி மண்டல அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.
- - நமது நிருபர் - -