/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுரவாயலில் மாயமான குழந்தைகள் போரூரில் மீட்பு
/
மதுரவாயலில் மாயமான குழந்தைகள் போரூரில் மீட்பு
ADDED : மே 16, 2024 12:29 AM
மதுரவாயல், மதுரவாயல், ஆலப்பாக்கம், ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் நாகப்பன், 30. இவரது மனைவி பார்வதி, 27. இத்தம்பதி இருவரும், மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்.
இவர்களது பிள்ளைகள் சங்கீதா, 5, கவுதம், 4. நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற தம்பதி, மதியம் வீடு திரும்பினர்.
அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசாரும், குழந்தைகளின் புகைப்படங்களை வாங்கி, பல்வேறு இடங்களில் தேடினர். கண்காணிப்பு கேமராவில், போரூர் வழியாக அக்காவின் கையை பிடித்தபடி, சிறுவன் நடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று தேடினர்.
இந்த நிலையில், போரூர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பத்திரமாக இருக்கும் தகவல் கிடைத்தது. போரூர் வழியாக வழி தெரியாமல் வந்த குழந்தைகளிடம், போலீசார் விசாரித்து மீட்டது தெரிந்தது. போலீசார் குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.