/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமைந்தகரையில் மாயமான சிறுமி வேலுாரில் மீட்பு
/
அமைந்தகரையில் மாயமான சிறுமி வேலுாரில் மீட்பு
ADDED : ஜூன் 02, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைந்தகரை,அமைந்தரையை சேர்ந்த 14 வயது சிறுமி, தொடர்ந்து மொபைல் போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்தனர். இதனால், கோபித்து கொண்ட சிறுமி, இரு நாட்களுக்கு முன் வீட்டை வீட்டு வெளியேறி மாயமானார். இதுகுறித்து, அமைந்தகரை போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.
சிறுமியிடம் இருந்த மொபைல் போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்த போது, சென்ட்ரல் ரயில் நிலையம் காட்டியது. பின், சில மணிநேரத்திற்குப் பின், வேலுாரில் சிக்னல் காட்டியது. வேலுார் போலீஸ் உதவியுடன் சிறுமியை மீட்ட போலீசார், அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.