/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஐ.டி., கல்லுாரி 75ம் ஆண்டு விழா
/
எம்.ஐ.டி., கல்லுாரி 75ம் ஆண்டு விழா
ADDED : ஜூலை 19, 2024 12:16 AM

குரோம்பேட்டை, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி., கல்லுாரி, 1949, ஜூலை, 18ம் தேதி, ராஜம் என்பவரால் துவங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போன்ற பல தலைவர்களை, இக்கல்லுாரி உருவாக்கியுள்ளது. இஸ்ரோவின் வளர்ச்சிக்கு, எம்.ஐ.டி., கல்லுாரி நிறைய பங்களித்துள்ளது.
இக்கல்லுாரியின், 75ம் ஆண்டு விழா, கடந்தாண்டு ஜூலை துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மாநாடு, கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, முன்னாள் கல்லுாரி தலைவர், துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரை கவுரவிக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கல்லுாரி நிறுவனர் ராஜம் தபால் தலை மற்றும் 75ம் ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டது.