/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.எல்.ஏ., சமாதானம் மணலியில் மனமாற்றம்
/
எம்.எல்.ஏ., சமாதானம் மணலியில் மனமாற்றம்
ADDED : ஏப் 01, 2024 12:49 AM
திருவொற்றியூர்:சென்னை, மணலி - பெரியதோப்பு கிராமத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, 2,000த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அனாதீனமாக உள்ள நிலத்தை கிராம நத்தமாக மாற்றி, பட்டா வழங்கக் கோரி, கிராம மக்கள், கலெக்டர் துவங்கி முதல்வர் தனிப்பிரிவு வரை, மனுக்கள் கொடுத்தனர். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதனால், பட்டா வழங்கும் வரை, எந்த தேர்தல்களிலும் ஓட்டளிப்பதில்லை என, கிராமத்தினர் முடிவு செய்தனர். இது குறித்து அறிந்த திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர் உள்ளிட்டோர், அவர்களிடம் பேச்சு நடத்தினர்.
இந்த தேர்தல் முடிந்ததும், பட்டா வழங்குவதற்கு வழிவகை செய்யப்படும் என, உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள், தேர்தல் புறக்கணிப்பு முடிவை தள்ளி வைப்பதாக கூறினர்.

