/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனித்தனியாக மனு வாங்கிய எம்.எல்.ஏ., - ஒன்றிய சேர்மன்
/
தனித்தனியாக மனு வாங்கிய எம்.எல்.ஏ., - ஒன்றிய சேர்மன்
தனித்தனியாக மனு வாங்கிய எம்.எல்.ஏ., - ஒன்றிய சேர்மன்
தனித்தனியாக மனு வாங்கிய எம்.எல்.ஏ., - ஒன்றிய சேர்மன்
ADDED : ஜூலை 20, 2024 01:07 AM
பூந்தமல்லி:பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை, வரதராஜபுரம், மேப்பூர், அகரமேல் உள்ளிட்ட ஊராட்சி மக்களின் வசதிக்காக, நசரத்பேட்டையில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நேற்று நடத்தப்பட்டது.
இதில், பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலர் கமலேஷ் ஆகியோர், தங்களது ஆதரவாளர்களுடன் முகாமை பார்வையிட்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இந்த முகாமிற்கு, பூந்தமல்லி ஒன்றிய தலைவராக உள்ள ஜெயகுமாருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதனால், எம்.எல்.ஏ., சென்ற சிறிது நேரம் கழித்து முகாமிற்கு வந்த ஒன்றிய தலைவர் ஜெயகுமார், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
எம்.எல்.ஏ., மற்றும் ஒன்றிய தலைவர் தனித்தனியாக மனுக்களை வாங்கியது, பூந்தமல்லி தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளதை, வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது.