/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் வடிகால் பணியில் சுணக்கம் நெ.சா., துறை மீது எம்.எல்.ஏ.,க்கள் காட்டம்
/
மழைநீர் வடிகால் பணியில் சுணக்கம் நெ.சா., துறை மீது எம்.எல்.ஏ.,க்கள் காட்டம்
மழைநீர் வடிகால் பணியில் சுணக்கம் நெ.சா., துறை மீது எம்.எல்.ஏ.,க்கள் காட்டம்
மழைநீர் வடிகால் பணியில் சுணக்கம் நெ.சா., துறை மீது எம்.எல்.ஏ.,க்கள் காட்டம்
ADDED : ஆக 15, 2024 12:11 AM
குரோம்பேட்டை, ஆக. 15-
செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும், வெள்ள தடுப்பு மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணி குறித்த ஆய்வு கூட்டம், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், குரோம்பேட்டையில் நேற்று நடந்தது.
அமைச்சர் அன்பரசன், எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி, ராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
பொதுப்பணித் துறை அதிகாரிகள்: இரும்புலியூர், பீர்க்கன்காரணை ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில், 96.5 கோடி ரூபாய் செலவில் மூடுகால்வாய் கட்டப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, ஜி.எஸ்.டி., சாலை வரை இப்பணி முடிக்கப்படும். எஞ்சிய பணி, அடுத்தாண்டு முடிக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில், 22 ஏரிகளை, 3.15 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அன்பரசன், அமைச்சர்: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளின் மதகு, கால்வாய் எந்த நிலையில் உள்ளன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். திருக்கழுக்குன்றம், லத்துார், மதுராந்தகம் பகுதிகளில் விவசாயிகள் அதிகம் உள்ளனர். அந்த ஏரிகளில் தண்ணீர் தேங்காமல் வீணாகிறது. தேவையான பணிகளை செய்து, தண்ணீரை தேக்க வேண்டும்.
ராஜா, எம்.எல்.ஏ., - தாம்பரம்: வெள்ள பாதிப்பு பற்றி திரையில் படமாக காட்டுவதால் எந்த பலனும் இல்லை. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே, தாம்பரத்தில் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். ஜி.எஸ்.டி., சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மற்ற வேலைகளை பார்க்கின்றனர். நெடுஞ்சாலைத் துறையினர், மனிதாபிமானத்தோடு பணியாற்ற வேண்டும்.
நெடுஞ்சாலைத் துறையினர் : பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில், வலதுபுறம் கால்வாய் பணி முடிந்துவிட்டது. இடது புறம், 200 மீட்டர் மட்டுமே உள்ளது. இரு மாதங்களில் அப்பணி முடிக்கப்படும்.
கருணாநிதி, எம்.எல்.ஏ., - பல்லாவரம்: பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில், பள்ளம் தோண்டும் போது, பாதாள சாக்கடை குழாயை உடைத்து நாசப்படுத்தி விட்டனர். இதன் காரணமாகவே, 2வது மண்டலத்தில், பாதாள சாக்கடை பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு நெடுஞ்சாலைத் துறை இழப்பீடும் வழங்கவில்லை. ஐந்து ஆண்டுகளாக மழைநீர் கால்வாய் கட்டுகின்றனர். சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம்.
அருண்ராஜ், கலெக்டர், செங்கல்பட்டு: பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில், கால்வாய் பணியை இரு மாதங்களில் முடித்துவிடுவோம் என, கடமைக்காக கூறக்கூடாது. பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
பருவமழையை எதிர்கொள்ள, ஒவ்வொரு துறையும் தயாராக வேண்டும். பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனுக்குடன் சரிசெய்ய, போதிய ஊழியர்கள், உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.