ADDED : ஏப் 06, 2024 12:24 AM
அ நிறம் | அளவு
மாதவரம், மாதவரம் ரவுண்டானா மேம்பாலம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் 'பங்க்'கில், திருப்பதியைச் சேர்ந்த முரளி, 43, என்பவர் வேலை செய்கிறார்.
நேற்று முன்தினம் இரவு, அங்கு 'ஹோண்டா 'டியோ' ஸ்கூட்டரில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். மாதவரம் போலீசார் விசாரித்தனர்.
இதில், திருட்டில் ஈடுபட்ட பெரம்பூரைச் சேர்ந்த பிரேம்குமார், 20, சஞ்சய், 20, ஆகியோர், நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து மொபைல் போன், இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
