/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மோடி, அண்ணாமலை வாழ்த்து அட்டை பறிமுதல்
/
மோடி, அண்ணாமலை வாழ்த்து அட்டை பறிமுதல்
ADDED : ஏப் 13, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழும்பூர், எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட லாங்க்ஸ் சாலை சந்திப்பில், நேற்று முன்தினம் இரவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த லோடு வேனை நிறுத்தி சோதனையிட்ட போது, 17 பெட்டிகளில் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலை உருவம் பொறித்த, வாழ்த்து அட்டைகள் இருந்தன. ஆனால் அவற்றில், அச்சகத்தின் முகவரி இல்லை.
ராயப்பேட்டையில் இருந்து கொளத்துார் பகுதிக்கு, அவை கொண்டு செல்லப்படுவது தெரிந்தது. வாழ்த்து அட்டைகளை பறிமுதல் செய்து, எழும்பூர் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். லோடு வேன் ஓட்டுனர் திருநாவுக்கரசன், 42, என்பவரிடம் விசாரணை நடக்கிறது.

