/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை மாநகராட்சியுடன் இணைக்க மூவரசம்பட்டு ஊராட்சி எதிர்பார்ப்பு
/
சென்னை மாநகராட்சியுடன் இணைக்க மூவரசம்பட்டு ஊராட்சி எதிர்பார்ப்பு
சென்னை மாநகராட்சியுடன் இணைக்க மூவரசம்பட்டு ஊராட்சி எதிர்பார்ப்பு
சென்னை மாநகராட்சியுடன் இணைக்க மூவரசம்பட்டு ஊராட்சி எதிர்பார்ப்பு
ADDED : மார் 04, 2025 08:23 PM
ஆலந்துார் சட்டசபை தொகுதியில் நங்கநல்லுார், திரிசூலம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ள மூவரசம்பட்டு ஊராட்சியில், 30,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்து, ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்கள் உருவாக்கப்பட்டன.
அந்த மண்டலங்களை ஒட்டியுள்ள மூவசம்பட்டு, நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சித்தாலப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை, மூன்று மண்டலங்களுடன் இணைக்க வேண்டும் என, ஊராட்சி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கை புறம் தள்ளப்பட்டது. தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டபோதும், இந்த ஊராட்சிகள் ஒதுக்கப்பட்டன.
கடந்த 2021 இறுதியில், தாம்பரம் மாநகராட்சியுடன் விடுபட்ட ஊராட்சிகளை இணைக்க முடிவெடுக்கப்பட்டது.
மூவரம்பட்டு ஊராட்சி மக்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை, ஆலந்துார் மண்டலத்துடன் இணைக்க வேண்டும் என, தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, மூவரசம்பட்டு ஊராட்சியை ஆலந்துார் மண்டலத்துடன் இணைக்க வலியுறுத்தி, ஊராட்சி மக்கள் சார்பில், நலச்சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மூவசரம்பட்டு நலச்சங்க கூட்டமைப்பின் செயலர் பாபு கூறியதாவது:
கடந்த 2009ல், ஆலந்துார் நகராட்சியின் எல்லையோரத்தில் இருந்த மூவரசம்பட்டு ஊராட்சி விடுபட்டு போனது, பகுதிவாழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மிகவும் மோசமான நிதி பற்றாக்குறையுடன் உள்ள மூவரசம்பட்டு ஊராட்சியை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என, முதல்வருக்கு தொடர் மனுக்கள் அளிக்கப்பட்டன.
கடந்த 2011ம் ஆண்டு நலச்சங்கங்களும் மற்றும் பொதுமக்களும் இணைந்து, ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தினோம். 2016ல் கையெழுத்து இயக்கம் நடத்தி, முதல்வருக்கு சமர்ப்பித்தோம்.
மூவரசம்பட்டு மக்களின் குரலுக்கு மதிப்பளித்து, அடையாளம்பட்டு, வானகரம் ஆகிய இரண்டு ஊராட்சிகளையும், சென்னை மாநகராட்சியில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், மூவரசம்பட்டு ஊராட்சியையும் சென்னை மாநகராட்சியில் இணைக்க, முதல்வர் ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- -நமது நிருபர்- -