/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புறநகர் அரசு பள்ளிகள் 90 சதவீதம் மேல் தேர்ச்சி
/
புறநகர் அரசு பள்ளிகள் 90 சதவீதம் மேல் தேர்ச்சி
ADDED : மே 07, 2024 12:18 AM
தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரம், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், 202 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 187 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம், 93 சதவீதம்.
குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேர்வு எழுதிய, 237 பேரில், 214 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம், 90 சதவீதம்.
ஜமீன் பல்லாவரம், நகராட்சி மேல்நிலை பள்ளியில், தேர்வு எழுதிய 149 மாணவர்கள், 136 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91 சதவீதம்.
அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய, 161 மாணவர்களில், 157 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம், 98 சதவீதம்.
பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 19 மாணவர்களில், 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.