/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளை பாலியல் தொழிலில் தள்ளி சீரழித்த தாய் கைது
/
மகளை பாலியல் தொழிலில் தள்ளி சீரழித்த தாய் கைது
ADDED : ஆக 05, 2024 12:52 AM
வியாசர்பாடி, வியாசர்பாடியைச் சேர்ந்த 32 வயது பெண். இவர், வியாசர்பாடியைச் சேர்ந்த முத்துலட்சுமி, 32, என்பவரிடம் 40,000 ரூபாய் கடன் வாங்கி உள்ளார். கடனை செலுத்த முடியாததால், தன் 16 வயது மகளை முத்துலட்சுமியிடம் ஒப்படைத்துள்ளார்.
முத்துலட்சுமி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பணம் சம்பாதித்து வந்துள்ளார். கடந்த 2023ல் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால், முத்துலட்சுமியிடம் சண்டை போட்டு, தாயிடம் சென்றுள்ளார்.
ஆனால், சிறுமியை மீண்டும் முத்துலட்சுமியிடம் செல்லுமாறு, அந்த கொடூர தாய் கட்டாயப்படுத்தி உள்ளார்.
இதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, உறவினரின் அடைக்கலத்தில் கடந்த எட்டு மாதங்களாக மணலிபுதுநகரில் வசித்து வந்துள்ளார்.
இதையறிந்த அவரது தாய், மீண்டும் முத்துலட்சுமியிடம் செல்லுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். இது குறித்து, எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், சிறுமியின் தாய், முத்துலட்சுமி, அவரது கணவர் நிஷாந்த், 37, அஜித்குமார், 20, வியாசர்பாடியைச் சேர்ந்த கிேஷார், புழலை சேர்ந்த மகேஸ்வரன், 24, ஆகிய ஆறு பேரை, பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.