/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறப்பு குழந்தைகளின் வாழ்க்கைக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள் அன்னையர் கவர்னர் ரவி உருக்கம்

ADDED : மே 13, 2024 01:59 AM

சென்னை:சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், ஆண்டுதோறும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் அன்னையரோடும் 'அன்னையர் தினம்' கொண்டாடப்பட்டது.
இதில், கவர்னர் ரவி, அவரது மனைவி லட்சுமி, 'டிவி' பிரபலம் ஈரோடு மகேஷ், சவுமான்ஸ்யா டிரஸ்ட் நிறுவனர் லட்சுமி உள்ளிட்டோர்.
நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது:
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பராமரித்து, தனித்திறமையைக் கண்டறிந்து, அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு, தங்களை தியாகமாக்குவோர் தான், உலகின் சூப்பர் தாய். அவர்களை கவுரவிப்பதில் கவர்னர் மாளிகை புனிதமடைகிறது. ஆட்டிச குழந்தைகள் இந்த உலகிற்கு கிடைத்த பரிசு. அக்குழந்தைகளை வளர்த்து, கடைசி வரையிலும் குழந்தைகளாகவே பராமரித்து வரும் பெற்றோருக்கு, நாம் உரிய மரியாதை அளிப்பதோடு, அந்த பெற்றோரை அங்கீகரிக்கவும் வேண்டும்.
சிறப்புக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர், மன இறுக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க, அவர்களின் மனிதநேயத்தை அடையாளம் கண்டு பாராட்ட வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உத்வேக சக்தியை அளிப்பது நம் கடமை.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சமூக ரீதியாக உயர்த்த, அவர்கள் படும் கஷ்டங்கள், சவால்கள் குறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இக்குழந்தைகள் துாய்மையான ஆன்மாக்களின் உணர்வைத் தாங்கி நிற்கிற உண்மையான மனிதர்கள்; கண்ணியத்திற்கு உரியவர்கள். இவர்களின் வளர்ச்சியில் நம் சமூகத்திற்கு பெரும் பொறுப்பு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.