/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேனர் விழுந்து வாலிபர் படுகாயம்; அதிர்ஷ்டவசமாக தப்பிய தாய்
/
பேனர் விழுந்து வாலிபர் படுகாயம்; அதிர்ஷ்டவசமாக தப்பிய தாய்
பேனர் விழுந்து வாலிபர் படுகாயம்; அதிர்ஷ்டவசமாக தப்பிய தாய்
பேனர் விழுந்து வாலிபர் படுகாயம்; அதிர்ஷ்டவசமாக தப்பிய தாய்
UPDATED : செப் 11, 2024 04:35 AM
ADDED : செப் 11, 2024 12:32 AM

திருவாலங்காடு, பேனர் சரிந்து விழுந்ததில் வாலிபர் தலையில் படுகாயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக அவரது தாய் சிறு காயங்களுடன் தப்பினார்.
புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் மூர்த்தியின் மறைவை அனுசரிக்கும் விதமாக, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில் கட்சியினர் அனுமதியின்றி பேனர் வைத்திருந்தனர்.
அதில், சின்னம்மாபேட்டை பேருந்து நிறுத்தம் எதிரில் இருந்த பேனர், நேற்று காலை திடீரென சரிந்து விழுந்தது. பைக்கில் சென்ற சின்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ், 25, மற்றும் அவரது தாய் நீலவேணி, 43 மீது பேனர் விழுந்ததில், நிலைதடுமாறி இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில், சந்தோஷுக்கு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. அவரது தாய் லேசான சிராய்ப்பு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
'அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பதாகைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைவது தொடர்கிறது' என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.