தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பட்டுப்போன மரத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

பட்டுப்போன மரத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

பட்டுப்போன மரத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : ஜூன் 28, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 09:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில், அறநிலையத்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்கின்றன.

குறிப்பாக, அலுவலக நேரத்தில் அதிகளவு செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இப்பகுதியில், அறநிலையத் துறை வளாகத்தின் நுழைவுவாயிலில், சாலையின் மிக அருகிலேயே பெரிய மரம் ஒன்று, முற்றிலும் பட்டுப்போன நிலையில் நிற்கிறது.

அவ்வப்போது பலத்த காற்று மற்றும் திடீர் மழை பெய்து வரும் நிலையில், இந்த மரத்தின் கிளைகள் திடீரென முறிந்து சாலையில் விழுந்தால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘உத்தமர் காந்தி சாலையில் வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் மற்றும் அறநிலையத் துறை அலுவலகத்தினுள் நுழைவோருக்கு, பட்டுப்போன மரம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பெரிய அசம்பாவிதம் ஏதேனும் நடக்கும் முன், சென்னை மாநகராட்சியும், அறநிலையத்துறை நிர்வாகமும் இணைந்து, ஆபத்தான மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்’ என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us