/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுரங்கப்பாதையில் நீர் கசிவு சறுக்கி விழும் வாகன ஓட்டிகள்
/
சுரங்கப்பாதையில் நீர் கசிவு சறுக்கி விழும் வாகன ஓட்டிகள்
சுரங்கப்பாதையில் நீர் கசிவு சறுக்கி விழும் வாகன ஓட்டிகள்
சுரங்கப்பாதையில் நீர் கசிவு சறுக்கி விழும் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 08, 2024 02:26 AM
தாம்பரம்:தாம்பரம் சுரங்கப்பாதையில், பக்கவாட்டு சுவரில் நீர் கசிந்து வெளியேறுவதால், வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் நிலை உள்ளது.
தாம்பரத்தில், இந்து மிஷன் மருத்துவமனை எதிரே, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள், இந்த சாலை வழியாக கிழக்கு - மேற்கு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இந்நிலையில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் இருந்து தொடர்ந்து நீர் கசிந்து கொண்டே இருக்கிறது. இதனால், பாசி படிந்து, வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் சூழல் நிலவுகிறது.
எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் தடுக்கவும், பாசிகளை அகற்றி, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சென்று வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.