/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பால சாலையில் மண் பூவையில் வாகன ஓட்டிகள் அவதி
/
மேம்பால சாலையில் மண் பூவையில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 01, 2024 01:52 AM

பூந்தமல்லி:பூந்தமல்லி மேம்பாலத்தின் மீது மண் குவியல் அதிகமாக உள்ளதால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, பூந்தமல்லி செல்லும் சாலையில் மேம்பாலம் உள்ளது.
இந்த வழியே பூந்தமல்லியின் உள்ளே, ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில், இந்த மேம்பாலம் பராமரிப்பின்றி உள்ளது.
மேம்பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும் சாலையில், சிறு மழைக்கே தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. மேலும் சாலை முழுதும் மண் குவியலாக உள்ளது.
இதனால், இந்த வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலத்தின் மீதுள்ள மண்ணை அகற்றி, சாலையை முறையாக பராமரிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.