/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திரு.வி.க., மணிமண்டபம் டி.ஆர்.பாலு பெருமிதம்
/
திரு.வி.க., மணிமண்டபம் டி.ஆர்.பாலு பெருமிதம்
ADDED : ஆக 27, 2024 12:23 AM

போரூர், போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், திரு.வி.க., பிறந்தார். அவர் பிறந்து வசித்த இடத்தில், திரு.வி.க., நினைவாக நுாலகம் மற்றும் சிலை நிறுவப்பட்டு உள்ளது.
திரு.வி.க., வின் 141 வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று காலை அவரது சிலைக்கு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., எம்.பி., -- டி.ஆர்.பாலு, மதுரவாயல் தி.மு.க., - எம்.எல்.ஏ., கணபதி, வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின், டி.ஆர்.பாலு கூறியதாவது: திரு.வி.க., விற்கு அரசு சார்பாக மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறி உள்ளது.
போரூரிலும் மணிமண்டபம் அமைய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. எம்.எல்.ஏ., -- எம்.பி., மற்றும் தமிழ் ஆர்வலர்களிடம் நிதி பெற்று விரைவில் மிகப்பெரிய மணிமண்டபமாக கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு திரு.வி.க., மார்பளவு சிலையில் இருந்த மூக்கு கண்ணாடி மாயமானது.
புதிய கண்ணாடி அணிவிக்கப்படாமல் இருந்து வந்தது. நேற்று சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் என்பவர் புதிதாக ஒரு கண்ணாடியை வாங்கி வந்து, திரு.வி.க., சிலைக்கு அணிவித்தார்.