/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தங்கையின் காதலனை கொன்றவர் கூட்டாளிகள் 3 பேருடன் கைது
/
தங்கையின் காதலனை கொன்றவர் கூட்டாளிகள் 3 பேருடன் கைது
தங்கையின் காதலனை கொன்றவர் கூட்டாளிகள் 3 பேருடன் கைது
தங்கையின் காதலனை கொன்றவர் கூட்டாளிகள் 3 பேருடன் கைது
ADDED : மே 15, 2024 12:33 AM

புழல், புழல், கங்காதரன் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் இளம்பரிதி, 20. இவர், நேற்று முன்தினம் மதியம், ஜெய் பாலாஜி நகர், ஒத்தவாடை தெருவில் உள்ள காலி நிலத்தில், தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, கொளத்துாரைச் சேர்ந்த இம்மானுவேல், 18, என்பவர், தன் நண்பர்களான தீபன் சக்கரவர்த்தி மற்றும் ஜோஸ்வா ஆகியோருடன் சென்று, இளம்பரிதியை கத்தியால் வெட்டியுள்ளார்.
இளம்பரிதியின் நண்பரான லோகேஷ் என்பவர், இம்மானுவேலை தடுத்து, கத்தியை பிடுங்கி அவரை வெட்டியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த இம்மானுவேல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த புழல் போலீசார், புழல் சைக்கிள் ஷாப், மயான பூமி அருகே உள்ள பாழடைந்த கட்டடத்தில் பதுங்கி இருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார், 21, புழலைச் சேர்ந்த சூர்யா, 24, இளம்பரிதி, 20, மற்றும் லோகேஷ், 24, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், இளம்பரிதியின் தங்கையை, இம்மானுவேல் காதலித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே, ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம், இளம்பரிதி தங்கையை வெளியூருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அங்கு வாகன விபத்தில் அவர் இறந்து விட்டார். அவரது தந்தையின் கால்கள் துண்டிக்கப்பட்டன.
இதனால், விரக்தியடைந்த இம்மானுவேல் தன் காதலியின் சாவுக்கு அவரது அண்ணன் இளம்பரிதி தான் காரணம் என, ஆத்திரத்தில் இருந்தார். இளம்பரிதிக்கு இம்மானுவேலால் தான், தங்கையை வெளியூருக்கு அனுப்ப வேண்டி வந்தது என, பழிவாங்க காத்திருந்தார்.
இந்த நிலையில் தான், புழல் வந்த இம்மானுவேல் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதில், சந்தோஷ் குமார் இளம்பரிதி, சூர்யா மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.

