/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்மன் கோவில்களில் தரிசனம் செய்த முருகன்
/
அம்மன் கோவில்களில் தரிசனம் செய்த முருகன்
ADDED : மே 24, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்,
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்த நிலையில், மத்திய அமைச்சரும் நீலகிரி லோக்சபா பா.ஜ., வேட்பாளருமான எல்.முருகன், நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
இவர், மத்திய, கால்நடை, மீன்வளம், பால்வளம் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சராக உள்ளார். பவுர்ணமியையொட்டி, திருவொற்றியூரில் பிரசித்தி தியாகராஜ சுவாமி கோவிலில் வீற்றிருக்கும் வடிவுடையம்மனை, பா.ஜ., நிர்வாகிகளுடன் வந்து, நேற்று மதியம் தரிசித்தார்.
அதேபோல, மீஞ்சூர் - திருவுடையம்மன், ஆவடி, திருமுல்லைவாயல் -- கொடியிடை அம்மன் ஆகிய கோவில்களிலும் அவர், சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.