நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, புரசைவாக்கம் கொசப்பேட்டை, எட்வர்ட் பார்க் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 34. ஓராண்டாக வேலைக்கு போகாமல், அவ்வப்போது மது அருந்தியபடி சுற்றித்திரிவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு, கொசப்பேட்டை ஐந்து விளக்கு அருகே, ஆட்டோவில் படுத்து துாங்கியுள்ளார். அவ்வழியே சென்ற சிலர், கார்த்திக் மூச்சு பேச்சில்லாமல் இருப்பதாக, அவரது உறவினர் பாபுவிடம் தெரிவித்துள்ளனர்.
கார்த்திக்கை மற்றொரு ஆட்டோவில் ஏற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், ஓட்டேரி போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.