ADDED : செப் 06, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பியம், கொளத்துாரைச் சேர்ந்த பெண் ஒருவரின் 15 வயது மகள், 10ம் வகுப்பு படித்து வந்தார். வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழகியுள்ளார்.
கடந்த 3ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி, வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து, செம்பியம் காவல் நிலையம் வந்தனர்.
இதையடுத்து மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்த போலீசார், சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரது பெற்றோருக்கு 'நோட்டீஸ்' அனுப்பி விசாரிக்கின்றனர்.