/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காயங்களுடன் கிடந்த பெண்ணின் நிர்வாண உடல்
/
காயங்களுடன் கிடந்த பெண்ணின் நிர்வாண உடல்
ADDED : மே 10, 2024 12:22 AM
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் கிராமத்தில், பாதிரிவேடு காவல் நிலையம் உள்ளது. இதன் அருகே, இந்தியன் ஆயில் பெட்ரோல் 'பங்க்' பின்புறம், பெண் ஒருவர் நிர்வாண நிலையில் இறந்து கிடப்பதாக, நேற்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தலையில் ரத்தக்காயங்களுடன், நிர்வாண நிலையில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அப்பகுதியில், ஆண்கள் அணியும் நீல நிற சட்டை ஒன்று இருந்தது. அதன் அருகே, காலி மதுபாட்டில் ஒன்றும், அரசு பேருந்தின் 20 ரூபாய் டிக்கெட்டும் கிடந்தது.
உடலைக் கைப்பற்றிய போலீசார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அப்பெண், மாதர்பாக்கம் பகுதியில் குப்பை சேகரிப்பவர் என கூறப்படு கிறது. அவர் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.