/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய எஸ்.டி., ஆணையம் மாநகராட்சிக்கு 'நோட்டீஸ்'
/
தேசிய எஸ்.டி., ஆணையம் மாநகராட்சிக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஜூலை 06, 2024 12:33 AM
சென்னை, பெரம்பூரைச் சேர்ந்தவர்பி.கல்யாணசுந்தரம். தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரான இவர், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டேரி மயானத்தில், பல்வேறு முறைகேடுகள்நடப்பதாக புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகளும், காவல் துறையும் அலட்சியமாகச் செயல்படுவதாக புகார் எழுந்தது.
நள்ளிரவில் சமூக விரோதிகள், மர்மமான முறையில் இறந்தவர் சமாதிகளை சிதைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு, அங்குள்ள மாநகராட்சி பணியாளர்கள் துணையாகச் செயல்படுவதாக புகார் கூறி இருந்தார்.
கல்யாணசுந்தரத்தின் இப்புகார் குறித்து, தேசிய எஸ்.டி., ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் குறித்து, 15 நாட்களுக்குள் உரிய முறையில் விளக்கம் அளிக்குமாறு, மாநகராட்சி மற்றும் போலீஸ் கமிஷனருக்கு 'நோட்டீஸ்' அனுப்பி உத்தரவிட்டுள்ளது.