/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் ஆர்.எம்.கே., பள்ளி மாணவர்கள் தகுதி

ADDED : ஜூலை 05, 2024 12:18 AM

சென்னை, இந்திய வாட்டர் போலோ கூட்டமைப்பு சார்பில், தேசிய வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் போட்டி, ம.பி., மாநிலம், இந்துாரில் வரும் 7 முதல், 11ம் தேதி வரை நடக்கிறது.
இப்போட்டிக்கான தமிழக அணி தேர்வு போட்டி, சென்னை, வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளத்தில், சமீபத்தில் நடந்தது.
மாநில அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் இருந்து வீரர் - வீராங்கனையர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டியில், சிறப்பாக விளையாடிய, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 13 வீரர்கள் தேசிய போட்டியில் பங்கேற்க, தமிழக அணியாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே ., ரெசிடென்சியல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களான சாய் கவுசிக் மற்றும் சாய் மகேந்திரா ஆகியோர் தமிழக அணிக்கு தேர்வாகியுள்ளனர்.
மாணவர்களை பள்ளியின் தாளாளர் யலமஞ்சி பிரதீப், முதல்வர் சப்னா சங்கலா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.