sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அலட்சியம் செய்த அ.தி.மு.க., 'டிபாசிட்' இழந்த தே.மு.தி.க.,

/

அலட்சியம் செய்த அ.தி.மு.க., 'டிபாசிட்' இழந்த தே.மு.தி.க.,

அலட்சியம் செய்த அ.தி.மு.க., 'டிபாசிட்' இழந்த தே.மு.தி.க.,

அலட்சியம் செய்த அ.தி.மு.க., 'டிபாசிட்' இழந்த தே.மு.தி.க.,


ADDED : ஜூன் 06, 2024 12:22 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், அ.தி.மு.க.,வின் அலட்சிய போக்கால், மத்திய சென்னை தொகுதியில் கூட்டணி கட்சி தே.மு.தி.க.,வின் வேட்பாளர் 'டிபாசிட்' இழந்தார். இத்தொகுதியில், பா.ஜ., தவிர்த்து, தே.மு.தி.க., வேட்பாளர் உட்பட அனைவரும் 'டிபாசிட்' இழந்தனர்.

லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுபதிவில், தமிழகத்திலேயே கடைசி இடத்தில் மத்திய சென்னை தொகுதி இடம் பிடித்தது. தேர்தலின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அதில், தி.மு.க.,வின் தயாநிதி 4,13,848 ஓட்டுகள் பெற்று, அடுத்து வந்த பா.ஜ., வேட்பாளர் வினோஜை 2,44,689 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

வினோஜ் 1,69,159 ஓட்டுகளும், அ.தி.மு.க., கூட்டணி கட்சியான தே.மு.தி.க., பார்த்தசாரதி 72,016 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சியின் கார்த்திகேயன். 46,031 ஓட்டுகள் பெற்று முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

அ.தி.மு.க., வின் நிலைப்பாடு அறிந்து களம் இறங்கிய தி.மு.க., ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. இரண்டாவது இடம் யாருக்கு என்பதே போட்டி என்ற நம்பிக்கையில் இருந்தனர் தி.மு.க.,வினர்

அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க., வேட்பாளர் பார்த்தசாரதிக்கு, அ.தி.மு.க., வினர் துவக்கத்தில் இருந்தே எவ்வித ஆதரவும் தரவில்லை. மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட அண்ணா நகர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட ஆறு தொகுதியிலும், முழுமையாக பிரசாரம் கூட செய்யாமல் அலட்சியமாக இருந்தனர்.

இரு கட்சிகள் சார்பில், அ.தி.மு.க., தொகுதி பொறுப்பாளர்களிடம் கொடுக்கப்பட்ட பணத்தை கூட ஆதரவாளர்களுக்கு முறையாக வினியோகிக்காமல் முழுமையாக 'ஆட்டை'யை போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆறு சட்டசபை தொகுதிகளில், ஒன்றில் கூட 20 ஆயிரம் ஓட்டுக்களை பார்த்தசாரதி தாண்டவில்லை. துறைமுகம் தொகுதியில் குறைந்த பட்சமாக 5,256 ஒட்டுகளும், அண்ணா நகரில் அதிகபட்சமாக 19,660 ஓட்டுகளும் பெற்றார். தாபல் ஓட்டுகளில் 244 ஓட்டு மட்டுமே கிடைத்தது.

அருகில் உள்ள தென் சென்னை, வடசென்னை லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகளில் பாதியை கூட, தே.மு.தி.க., வாங்க முடியாமல் 'டிபாசிட்' இழந்தது.

பா.ஜ., கூடுதல் பலம்


 பா.ஜ.,வை பொறுத்தவரை, வழக்கமாக வாங்கும் ஓட்டுகளை விட, இம்முறை கூடுதல் ஓட்டுகளை கைப்பற்றியுள்ளது. வினோஜ், அதிகப்படியாக அண்ணா நகரில், 33,781 ஓட்டுகளும், குறைந்த பட்சம், எழும்பூரில் 23,564 ஓட்டுகளையும் பெற்றார்.

 நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகேயன், முழுவீச்சில் ஆறு தொகுதிகளிலும் பிரசாரம் செய்தார். அண்ணா நகரில் அதிகப்பட்சமாக 11,214 ஓட்டுகள் பெற்றார். அதே நேரம் மற்ற ஐந்து தொகுதிகளில், 10 ஆயிரம் ஓட்டுகளை தாண்டவில்லை. ஒட்டுமொத்தமாக, 45,856 ஓட்டுகள் பெற்று, நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.






      Dinamalar
      Follow us