/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை சீரமைப்பில் அலட்சியம் வேளச்சேரி மக்கள் பரிதவிப்பு
/
சாலை சீரமைப்பில் அலட்சியம் வேளச்சேரி மக்கள் பரிதவிப்பு
சாலை சீரமைப்பில் அலட்சியம் வேளச்சேரி மக்கள் பரிதவிப்பு
சாலை சீரமைப்பில் அலட்சியம் வேளச்சேரி மக்கள் பரிதவிப்பு
ADDED : ஆக 22, 2024 12:34 AM

வேளச்சேரி, அடையாறு மண்டலம், 17வது வார்டு, வேளச்சேரி டான்சி நகரில் 30க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மின் கேபிள், குடிநீர், கழிவுநீர் குழாய், தொலைத்தொடர்பு கேபிள் பதிக்க, அவ்வப்போது சாலையில் பள்ளம் தோண்டப்படுகிறது.
பள்ளம் தோண்டிய சாலைகளை, மாநகராட்சியிடம் தகவல் தெரிவித்து, அந்தந்த துறைகளே சீரமைத்து கொடுக்க வேண்டும். ஆனால், மூன்று - ஆறு மாதங்களாகியும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவில்லை.
இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். லேசான மழைக்கே, பள்ளத்தில் தண்ணீர் தேங்கி, சாலை மேலும் சேதமடைகிறது.
இது குறித்து, டான்சி நகர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
சாலை பள்ளத்தால், அதில் பயணிக்கும் பள்ளி குழந்தைகள், கர்ப்பிணியர், வயதானவர்கள் பல்வேறு உடல் உபாதைகளை அனுபவிக்கின்றனர்.
மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின் வாரிய அதிகாரிகள், கவுன்சிலரிடம் பலமுறை கூறி விட்டோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்னும் சில நாட்கள் கடந்தால், பருவமழையை காரணம் காட்டி, சாலை சீரமைப்பை கிடப்பில் போட்டுவிடுவர்.
சாதாரண மழைக்கே வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு ஏற்படும். இதில், சாலையில் பள்ளம் இருந்தால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இதை உணர்ந்து, உயர் அதிகாரிகள் தலையிட்டு சாலையை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.