/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி காமராஜர் நினைவிடம் பராமரிப்பு பணியில் அலட்சியம்
/
கிண்டி காமராஜர் நினைவிடம் பராமரிப்பு பணியில் அலட்சியம்
கிண்டி காமராஜர் நினைவிடம் பராமரிப்பு பணியில் அலட்சியம்
கிண்டி காமராஜர் நினைவிடம் பராமரிப்பு பணியில் அலட்சியம்
ADDED : மே 06, 2024 01:23 AM

சென்னை:''கிண்டியில், முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவிடம் முறையான பராமரிப்பின்றி உள்ளது. எனவே, பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவிடம் பராமரிப்பின்றி இருப்பதை அறிந்து, தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், அகில இந்திய நாடார் மகாஜன சங்க தலைவர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில செயலர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், அரி நாடார் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்று பார்வையிட்டோம்.
புல்வெளிகள் மற்றும் நடைபாதையில் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாமல் கருகி போயுள்ளன. அதேபோல, வளாகம் குப்பைகளாக காட்சியளிக்கின்றன. இதுபோன்ற செடிகளை மீண்டும் உருவாக்க வேண்டுமென்றால், ஐந்து ஆண்டுகளாகும். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி போன்றவர்களின் நினைவிடத்தை முறையாக பராமரிக்கும் அரசு, காமராஜர் நினைவிடத்தையும் பராமரிக்க தவறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.