/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியை கடித்த தெரு நாய் புகாரை நிராகரித்து அலட்சியம்
/
சிறுமியை கடித்த தெரு நாய் புகாரை நிராகரித்து அலட்சியம்
சிறுமியை கடித்த தெரு நாய் புகாரை நிராகரித்து அலட்சியம்
சிறுமியை கடித்த தெரு நாய் புகாரை நிராகரித்து அலட்சியம்
ADDED : மே 31, 2024 12:53 AM

அம்பத்துார், சென்னை மாநகராட்சி, அம்பத்துார் மண்டலம், 89வது வார்டு, முகப்பேர் அடுத்த ஜீவன் பீமா நகர், ரவுண்டு பில்டிங் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன், 31. ஜெனரேட்டர் ஆப்பரேட்டர். அவரது மனைவி பிரதீபா, 26. அவர்களது, இரண்டரை வயது பெண் குழந்தை யாஷ்மிகா.
கடந்த, 27ம் தேதி மாலை 4:00 மணி அளவில், அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அப்போது, காற்றுக்காக குழந்தையை பிரதீபா வீட்டு வாசலுக்கு அழைத்து சென்றார். அப்போது அங்கிருந்த தெருநாய், குழந்தை யாஷ்மிகாவை கடித்து குதறியது. குழந்தையின் கன்னம், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
அண்ணாநகர், சாந்தி காலனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்று, சிகிச்சை பெற்றார். அங்கு குழந்தையின் கன்னத்தில் ஏற்பட்ட காயத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.
இது குறித்து போலீசில் புகார் அளிக்க தங்க பாண்டியன் முயன்றார். 'வளர்ப்பு நாய் என்றால் புகாரை ஏற்கலாம்; தெருநாய்க்கு புகாரை ஏற்க முடியாது. மாநகராட்சியிடம்தான் தெரிவிக்க வேண்டும்' என, போலீசார் கைவிரித்தனர். இதைத் தொடர்ந்து, தெருநாய்களை கட்டுப்படுத்த கோரி அம்பத்துார் மண்டல அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
அந்த பகுதியில் வலம் வந்த, மாநகராட்சி ஊழியர்கள் நாய் சிக்கவில்லை என கூறி சென்றுள்ளனர்.
தங்கபாண்டியன் கூறியதாவது:
எங்கள் பகுதியில், 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருகின்றன. வீட்டு வாசலில் கூட குழந்தைகள் விளையாட முடிவதில்லை. இரவில் வீடு திரும்பும் போதும், நாய்களின் தொல்லையால் வாகன விபத்தில் சிக்க நேரிடுகிறது.
நாய் கடியால் பாதிக்கப்பட்ட, என் குழந்தை இங்கு வரவே பயப்படுகிறது. சமாதானம் கூறி நேற்றுதான் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
நாய் குரைக்கும் சத்தம் கேட்டாலே குழந்தை அலறுகிறாள். மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல், நாய்களின் தொல்லையை தடுக்க வேண்டும். மற்ற குழந்தைகளை பாதுகாக்க, மாநகராட்சி முன் வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.