/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீண்டும் ஆக்கிரமிப்பில் சிக்கிய நேரு பஜார் சாலை காற்றில் பறக்கும் ஆவடி கமிஷனர் உத்தரவு

ADDED : ஆக 12, 2024 04:29 AM

ஆவடி:ஆவடி, நேருபஜார் சாலையில் 150க்கும் மேற்பட்ட சிறு வணிகர்கள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். அவர்களில் சிலர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைக் கடந்து, சாலையில் கடை அமைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கடைகளுக்கு வரும் பொதுமக்களும், கண்டமேனிக்கு சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
இதனால், ஆவடி ரயில் நிலையம், ஆவடி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்வோர், தினமும் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, ஆவடி ரயில் நிலைய பகுதிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் நிலவி வருகிறது. இது குறித்து, கடந்த செப்., மாதம் நடந்த பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வு மேற்கொண்ட போலீஸ் கமிஷனர் சங்கர், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையில் கயிறு பதிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, அப்போதைய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, இருசக்கர வாகனங்கள் நிறுத்த கயிறு பதித்து ஒழுங்குப்படுத்தினர். இதனால், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
அதன்பின் அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்டவற்றால் மீண்டும் பழைய நிலைமை திரும்பி உள்ளது.
பஜார் சாலை மீண்டும் 10 அடி சாலையாக சுருங்கி, இருசக்கர வாகனத்தில் செல்வதற்கே மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.