/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிக்கரணை தாலுகா புதிதாக உருவாக்கம்?
/
பள்ளிக்கரணை தாலுகா புதிதாக உருவாக்கம்?
ADDED : மே 29, 2024 12:10 AM
சென்னை, மாநிலத்தில், அதிக பரப்பு கொண்ட தாலுகாவாக, சோழிங்கநல்லுார் தாலுகா உள்ளது. இங்கு, 10.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
மொத்தம், 17 கிராம நிர்வாக அலுவலகங்களைக் கொண்டது. தினமும், 400 முதல் 500 மனுக்கள் இந்த அலுவலகத்தில் கையாளப்படுகின்றன. மேலும், பரப்பளவு அதிகம் கொண்டதால், தாலுகாவை இரண்டாக பிரிக்க, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்தனர். சட்டசபையிலும் இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், 9 கிராம எல்லையில் உள்ள பள்ளிக்கரணை குறுவட்டத்தை மையப்படுத்தி, 'பள்ளிக்கரணை' என்ற பெயரில் புதிய தாலுகா அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மீதமுள்ள, 8 கிராம எல்லையில் உள்ள சோழிங்கநல்லுார் குறுவட்டத்தை மையப்படுத்தி, 'சோழிங்கநல்லுார்' தாலுகா செயல்படும்.
இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.