/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி பெண்ணிடம் நுாதன மோசடி
/
சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி பெண்ணிடம் நுாதன மோசடி
ADDED : ஜூன் 16, 2024 12:31 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், ஜோதி நகரைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 22. இவர், நந்தனத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று காலை, வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில், பிரவீன்குமாரின் தாய் உமாவிற்கு, மர்ம நபர் ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மகன் நண்பர்களுடன் சேர்ந்து தவறு செய்ததால், சி.பி.ஐ., அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளோம்.
அவரை விடுவிக்க வேண்டுமானால், 40,000 ரூபாய் கட்ட வேண்டும் என கூறியுள்ளார். 'தன்னிடம் அவ்வளவு பணம் கிடையாது' என, உமா கூறியுள்ளார்.
அதற்கு, கைவசம் இருக்கும் பணத்தை முதலில் அனுப்பி விட்டு, பின் முழு பணத்தையும் அனுப்புங்கள்.
இல்லாவிட்டால், மகனை காப்பாற்ற முடியாது என, மிரட்டியுள்ளார்.
பயந்து போன உமா, மர்ம ஆசாமி கொடுத்த மொபைல் போன் எண்ணுக்கு, 'ஜிபே' வாயிலாக, 10,000 ரூபாய் அனுப்பினார். சிறிது நேரம் கழித்து, மகனுக்கு போன் செய்து விசாரித்த போது, அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என, பிரவீன்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.