/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விநாயகா மிஷன் கல்லுாரியில் புதிதாக சட்ட படிப்பு துவக்கம்
/
விநாயகா மிஷன் கல்லுாரியில் புதிதாக சட்ட படிப்பு துவக்கம்
விநாயகா மிஷன் கல்லுாரியில் புதிதாக சட்ட படிப்பு துவக்கம்
விநாயகா மிஷன் கல்லுாரியில் புதிதாக சட்ட படிப்பு துவக்கம்
ADDED : மார் 09, 2025 01:06 AM

சென்னை, சென்னை அருகே பையனுாரில், வி.எம்.எல்.எஸ்., எனும் விநாயகா மிஷன் சட்டக் கல்லுாரி உள்ளது.
இங்கு, எல்.எல்.எம்., முதுகலை சட்டப்படிப்பை, புதிதாக நேற்று துவக்கியுள்ளது. ஜிண்டால் குளோபல் பல்கலை உடன் இணைந்து, உலக தரத்தில் இப்பயிற்சி வழங்க உள்ளதாக, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் துவக்க விழாவில், மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வைத்தியநாதன், சிறப்பு எல்.எல்.எம்., முதுகலை பட்டம் குறித்தும், அதன் நன்மைகளையும் எடுத்துரைத்தார்.
விநாயக மிஷன் 'டீன்' டாக்டர் அனந்த பத்மநாபன், சட்டக்கல்வியில் புதுமை மற்றும் தொழில்நுட்ப சட்டத்தில், வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் குறித்து பேசினார்.
மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணன், சட்ட நுண்ணறிவுகள் குறித்து விரிவாக பேசினார்.
இந்த கல்லுாரியில், எல்.எல்.எம்., படிக்க மாணவர்களிடம், ஆர்வம் அதிகரித்து வருகிறது என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.