/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் - சோமங்கலம் சாலை உள்வாங்குவதை தடுக்க 'புது டெக்னிக்'
/
தாம்பரம் - சோமங்கலம் சாலை உள்வாங்குவதை தடுக்க 'புது டெக்னிக்'
தாம்பரம் - சோமங்கலம் சாலை உள்வாங்குவதை தடுக்க 'புது டெக்னிக்'
தாம்பரம் - சோமங்கலம் சாலை உள்வாங்குவதை தடுக்க 'புது டெக்னிக்'
ADDED : ஆக 17, 2024 12:38 AM

தாம்பரம், தாம்பரத்தில் இருந்து கிஷ்கிந்தா வழியாக, சென்னை புறவழி மற்றும் வெளிவட்ட சாலைகளை கடந்து, சோமங்கலத்திற்கு சாலை செல்கிறது. முக்கிய சாலை என்பதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
டிப்பர், ஜல்லி லாரிகள், தனியார் கல்லுாரி பேருந்துகள் அதிகம் செல்கின்றன. இச்சாலையை ஒட்டி, பாப்பான் கால்வாய் மற்றும் அடையாறு ஆறு செல்கிறது.
ஒவ்வொரு மழையின்போதும்,  சாலையை ஒட்டிய நிலங்களில் வெள்ளம் தேங்கும். அது வடிய பல மாதங்கள் ஆகும்.
இதன் காரணமாக, நிலத்தடியில் ஈரப்பதம் இருப்பதால், அப்பகுதியில் மண் இலகு தன்மையில் இருக்கும். இதனால், இச்சாலையில் திடீர் திடீரென சாலை உள்வாங்குவதும், பள்ளம் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
இரவில், வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், திடீர் பள்ளம் இருப்பதை பார்த்து, கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, பலமான அடித்தளம் அமைத்து, சாலை போட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, சாலை உள்வாங்குவதை தடுக்க, 12 கோடி ரூபாய் செலவில், 1 கி.மீ., துாரத்திற்கு சாலையை அகலப்படுத்தி, கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலையின் மட்டத்தில் இருந்து, 13  அடி  ஆழத்திற்கு இந்த தடுப்பு சுவர் கட்டப்படுகிறது. மழைக்கு முன் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

