/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரிடியன் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை
/
மெரிடியன் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை
மெரிடியன் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை
மெரிடியன் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை
ADDED : ஜூன் 25, 2024 12:54 AM

சென்னை,
சென்னையில் உள்ள மெரிடியன் மருத்துவமனையில்,'இன்டர்ஸ்டீடியல் ப்ராச்சி தெரபி' சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. வடசென்னையில் இருந்து நெல்லுார் வரை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு இது பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அசோக் தியாகராஜன் கூறியதாவது:
மெரிடியன் மருத்துவமனை, சென்னையில் உள்ள புற்று நோய் சிகிச்சை மையங்களில், சிறப்பான பங்கை வழங்குகிறது.
'இன்டர்ஸ்டீடியல் ப்ராச்சி தெரபி' புற்றுநோய் சிகிச்சை, கதிரியக்க மூலங்களை நேரடியாக கட்டுக்குள் வைக்கிறது.
இதன் வாயிலாக, பாதிக்கப்பட்ட பகுதிக்கு மட்டும் துல்லியமான கதிர் வீச்சை வழங்கி, மற்ற திசுக்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.
முக்கியமாக விந்து சுரப்பி, கர்ப்பப்பை வாய், மார்பக புற்றுநோய்களுக்கு இந்த சிகிச்சை அதிக பலன் அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், மருத்துவமனை டாக்டர்கள் ராஜேஷ் கர், கதிர் வீச்சு புற்றுநோயியல் நிபுணர் பாண்டிதுரை, மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் கென்னி ராபர்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.