/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண் வடிகட்டி மூடி இல்லை: பாதசாரிகள் அச்சம்
/
மண் வடிகட்டி மூடி இல்லை: பாதசாரிகள் அச்சம்
ADDED : ஆக 01, 2024 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி- - தாம்பரம் பிரதான சாலை, பள்ளிக்கரணை, 'அனிமல் கோரன்டைன்' அருகே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பாதையில், மண் வடிகட்டி மூடி இல்லை.
இதன் அருகே, அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. வடிகட்டி மூடி இல்லாததால் பள்ளி மாணவர்கள், பாதசாரிகள் வடிகால் உள்ளே தவறி விழுந்து காயமடைய வாய்ப்புள்ளது.
தவிர, வடிகால் உள்ளே குப்பை சேகரமாகி, நீரோட்டமும் தடைபடும்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இங்கு மூடி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜே. உமையாள், 65, பள்ளிக்கரணை.