/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையின் 3 லோக்சபா தொகுதிகளில் 109 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு வடசென்னையில் 2 மணி நேரம் பரபரப்பு
/
சென்னையின் 3 லோக்சபா தொகுதிகளில் 109 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு வடசென்னையில் 2 மணி நேரம் பரபரப்பு
சென்னையின் 3 லோக்சபா தொகுதிகளில் 109 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு வடசென்னையில் 2 மணி நேரம் பரபரப்பு
சென்னையின் 3 லோக்சபா தொகுதிகளில் 109 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு வடசென்னையில் 2 மணி நேரம் பரபரப்பு
ADDED : மார் 29, 2024 12:26 AM

வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது. இம்மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது.
வட சென்னை தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் கலாநிதி மனுவில் கையொப்பமிட்டிருந்த நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சுரேஷ் என்பவருடைய உரிமம் 2024, பிப்., 6ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டதாகவும், அவரது கையொப்பம் செல்லாது என்பதால், கலாநிதி மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் பா.ஜ., வேட்பாளர் பால் கனகராஜ் புகார் மனு அளித்தார்.
மீண்டும்...
அதேபோல், அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோகர் மீது 2006ல் கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாக, சுயேச்சை வேட்பாளர் ஸ்ரீதர் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணைக்காக அவரது மனு நிறுத்தி வைக்கப்பட்டது. மற்ற மனுக்கள் மீது ஆய்வு நடந்தது.
நிறுத்தப்பட்ட இரு மனுக்கள் மீதான விசாரணை, மதியம் 12:30 மணிக்கு மீண்டும் துவங்கியது.
அப்போது, தி.மு.க., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'வழக்கறிஞர் சுரேஷ் தன் உரிமத்தை திரும்ப பெற ஏற்கனவே விண்ணப்பித்திருக்கிறார். அது நிலுவையில் இருக்கிறது. அதனால் அவர் கையொப்பமிட்டது செல்லும்' என, அதற்குரிய ஆவணங்களை கலாநிதி சமர்ப்பித்தார்.
சமர்ப்பிப்பு
அந்த ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் நடத்தும் அதிகாரி கட்டா ரவி தேஜா, கலாநிதி வேட்பு மனுவை ஏற்றார்.
அதேபோல அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோகர் மீது இருந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதற்கான ஆவணங்களை அவர் சமர்ப்பித்தார்.
இதையடுத்து, மனோகரின் வேட்பு மனுவும்ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்களின் மனு நிறுத்தி வைக்கப்பட்டதால், இரண்டு மணி நேரம் தேர்தல் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
தென் சென்னை தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் தமிழிசை மூன்று மனுக்கள் தாக்கல் செய்தார். இவற்றில், இரண்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன; ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தி.மு.க., வேட்பாளர் தமிழச்சியும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்தார். இரண்டு மனுக்களை நிராகரித்த தேர்தல் அதிகாரி, ஒரு மனுவை ஏற்றார்.
அ.தி.மு.க., வேட்பாளர்ஜெயவர்தன், நான்கு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இதில் மூன்று நிராகரிக்கப்பட்டு, ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முரண்பாடு
மத்திய சென்னையில், தேர்தல் பொது பார்வையாளர் சுரேஷ் தலைமையில் மனுக்கள் பரிசீலனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தி.மு.க.,வில் தயாநிதி, பா.ஜ.,வில் வினோஜ், தே.மு.தி.க.,வில் பார்த்தசாரதி உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
இவற்றில், பா.ஜ.,வின் மனோஜ் வேட்பு மனு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவில்லை என, தி.மு.க.,வினர் ஆட்சேபனை தெரிவித்தனர்.
மனு தாக்கலில் இறுதி நாளான நேற்று முன்தினம், ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தாமதமானதால் முரண்பாடு இருந்தது.
திருத்தப்பட்ட மனுக்கள் கையில் இருப்பதாகவும், அதில் விபரங்கள் சரியாக உள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கியதை அடுத்து, வேட்பு மனு பரிசீலனை சுமுகமாக முடிந்தது.
- நமது நிருபர் குழு -

