தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வடசென்னை வளர்ச்சி திட்டம் செயல்பாட்டில் 108 பணிகள்

வடசென்னை வளர்ச்சி திட்டம் செயல்பாட்டில் 108 பணிகள்

வடசென்னை வளர்ச்சி திட்டம் செயல்பாட்டில் 108 பணிகள்


ADDED : ஜூலை 23, 2024 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2024 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராயபுரம், ''வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 208 பணிகளில், 108 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன,'' என, அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக, சென்னை, ராயபுரம், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அருகில் உள்ள நீர்வள ஆதார துறைக்கு சொந்தமான பணிமனை மற்றும் பண்டகசாலை இடம்.

மேலும், வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி சாலையில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பயன்படுத்தாத பழைய பொது பண்டக சாலை இடத்தை நேற்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.

அவர் கூறியதாவது:

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 4,378 கோடி ரூபாயில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. திட்டமிடப்பட்டுள்ள 208 பணிகளில், 108 பணிகள் நடந்து வருகின்றன. மீதமுள்ள 100 பணிகள் மேற்கொள்வதற்கு அந்தந்த துறைகள் சார்பில் ஆய்வுகள் நடக்கிறது.

இதில் பெருநகர வளர்ச்சி குழும திட்ட பணிகள் 685 கோடி ரூபாயில் நடக்கிறது. திட்டமிட்டபடி 4,378 கோடி ரூபாயில் பணிகள் நிறைவடையும் போது, நிச்சயம் வடசென்னை வளர்ச்சி பெறும். வடசென்னை பகுதி மக்களுடைய வாழ்வாதாரம், அடிப்படை தேவைகள் நிறைவு பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை முதன்மை செயலர் காகர்லா உஷா, பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us