/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினா நீச்சல் குளம் பராமரிப்பு மாநகராட்சியே ஏற்பதாக அறிவிப்பு
/
மெரினா நீச்சல் குளம் பராமரிப்பு மாநகராட்சியே ஏற்பதாக அறிவிப்பு
மெரினா நீச்சல் குளம் பராமரிப்பு மாநகராட்சியே ஏற்பதாக அறிவிப்பு
மெரினா நீச்சல் குளம் பராமரிப்பு மாநகராட்சியே ஏற்பதாக அறிவிப்பு
ADDED : செப் 15, 2024 12:15 AM

சென்னை, சென்னை மாநகராட்சி நீச்சல் குளத்தில், மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. குறிப்பாக, நீச்சல் பயிற்சி மேற்கொள்வோருக்கான வசதிகள், கழிப்பறை, உடை மாற்றும் அறைகள், கண்கவர் ஓவியங்கள், சுற்றுச்சுவர் ஆகிய பணிகள் நடக்கின்றன.
இப்பணிகளை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
மெரினா நீச்சல் குளம் மேம்படுத்தும் பணி, ஓரிரு வாரத்தில் முடிவடையும். இந்த நீச்சல் குள பராமரிப்பை, மாநகராட்சியே சோதனை முறையில் மேற்கொள்ள உள்ளது.
அதன்படி, பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு, நீச்சல் வீரர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படும். மேலும், 'க்யூ.ஆர்.,' குறியீடு வாயிலாக கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மெரினா நீச்சல் குளம் பராமரிப்பின் பழைய ஒப்பந்தம் முடிந்த நிலையில், டெண்டருக்காக பொது அறிவிப்பு வெளியிடாமல், கமுக்கமாக தனிப்பட்ட ஒருவருக்கு ஒப்பந்தம் விட உள்ளதாக சர்ச்சை கிளம்பியது. இது குறித்து நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, நீச்சல் குள பராமரிப்பை, மாநகராட்சியே மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.