/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரபல ரவுடி குணா ஸ்ரீபெரும்புதுாரில் கைது
/
பிரபல ரவுடி குணா ஸ்ரீபெரும்புதுாரில் கைது
ADDED : மார் 07, 2025 12:17 AM

ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி குணா என்ற குணசேகரன், 46. இவர் மீது, எட்டு கொலை வழக்கு, 13 கொலை முயற்சி உட்பட 58 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், மதுரமங்கலம் கிராமத்தில், சமீபத்தில் நுாறு நாள் வேலை திட்டப் பணி நடந்துள்ளது. இப்பணியில், கால்வாய் வெட்டும் பணி முறையாக நடக்கவில்லை என குணா கூறிவந்துள்ளார்.
இது சம்பந்தமாக, அத்திட்டத்தின் மக்கள் நலப்பணியாளரான, அதே பகுதியைச் சேர்ந்த மோகன், 59, என்பவரிடம், கடந்த மாதம் 28ம் தேதி கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, மோகனை கைகளால் தாக்கியதோடு, கத்தியால் வெட்டவும் குணா முயன்றுள்ளார்.
இதுகுறித்து மோகன் புகாரின்படி, சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து தேடிவந்த நிலையில், குணாவை நேற்று கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.