/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி விரைவு சாலை நடைபாதையை தகரத்தால் மூடி ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம்
/
வேளச்சேரி விரைவு சாலை நடைபாதையை தகரத்தால் மூடி ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம்
வேளச்சேரி விரைவு சாலை நடைபாதையை தகரத்தால் மூடி ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம்
வேளச்சேரி விரைவு சாலை நடைபாதையை தகரத்தால் மூடி ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம்
ADDED : செப் 04, 2024 01:46 AM

வேளச்சேரி:வேளச்சேரி விரைவு சாலை, 200 அடி அகலம் உடையது. இதில், ஓ.எம்.ஆர்., மேடவாக்கம், தரமணி உள்ளிட்ட பகுதியில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள், விரைவு சாலை வழியாக செல்கின்றன. இதனால், இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
இந்த சாலை ஓரம், வேளச்சேரி ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும், 15 அடி அகல கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மூடு கால்வாயாக மாற்றி, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்த கால்வாயை ஒட்டி, சிக்னல் அருகில் சாலை பகுதியில் கழிவுநீரேற்று நிலையம் உள்ளது. மூடு கால்வாய் அமைக்கும் முன்பே, இந்த நிலையத்தை இடம் மாற்ற வேண்டும் என, வேளச்சேரி பகுதி நலச்சங்கங்கள் கூறின.
ஆனால், நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், விரிவாக்கம் செய்தபின் சாலை மைய பகுதியில், கழிவுநீரகற்று நிலையம் அமைத்துவிட்டது.
இதர பகுதியில் வேகமாக செல்லும் வாகனங்கள், நிலையம் அமைந்துள்ள பகுதியில் நெரிசலில் சிக்கி கொள்கின்றன.
இந்த நிலையத்தை ஒட்டி, மேற்கு திசையில் மூடு கால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதை சிலர் ஆக்கிரமிரத்து, தகரம் கொண்டு மூடி வைத்துள்ளனர்.
இதனால், நடைபயிற்சி செல்வோர் கழிவுநீரகற்று நிலையத்தைச் சுற்றி, சாலையில் நடக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக, அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.
வேளச்சேரி மக்கள் கூறியதாவது:
வேளச்சேரியில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்டியும், வாகன நெரிசல் குறையவில்லை. விரைந்து பயணிக்க விரைவு சாலை அமைக்கப்பட்டது.
ஆனால், கழிவுநீரகற்றும் நிலையம், நடைபாதை ஆக்கிரமிப்பால் நெரிசல் அதிகரிக்கிறது. பாதசாரிகள் நடந்து செல்ல வழி இல்லை.
ஆக்கிரமிப்பாளர்களிடம் கேட்டால், சில கட்சியின் பெயரை கூறி மிரட்டுகின்றனர். அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தகரத்தை அகற்றி, கழிவுநீரேற்று நிலையத்தை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சில மக்கள் பிரதிநிதிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, எங்கள் நடவடிக்கையை தடுக்கின்றனர். இது குறித்து, உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்' என்றனர்.