/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பு கடைகள் அண்ணாநகரில் அகற்றம்
/
ஆக்கிரமிப்பு கடைகள் அண்ணாநகரில் அகற்றம்
ADDED : ஆக 19, 2024 02:07 AM
அண்ணா நகர்:அண்ணாநகர் ரவுண்டானா முதல் திருமங்கலம் வரை உள்ள பிரதான சாலையில் இருந்த நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
சென்னை மாநகர சாலைகளில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட, அண்ணா நகர் ரவுண்டானா முதல், திருமங்கலம் வரை உள்ள பிரதான சாலை மற்றும் நடைபாதைகளில், ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன.
இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்த தொடர் புகார்களையடுத்து, நேற்று முன்தினம் இரவு மாநகராட்சி அதிகாரிகள்,'பொக்லைன்' வாயிலாக, சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
இதில் தள்ளுவண்டி கடைகள், 'டீ' கடைகள், பிரியாணி கடைகள் என, 30க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.
இதனால் சாலையோர வியாபாரிகள் ஆத்திரமடைந்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.