/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிறந்த நாளில் முதியவர் சுருண்டு விழுந்து இறப்பு
/
பிறந்த நாளில் முதியவர் சுருண்டு விழுந்து இறப்பு
ADDED : ஏப் 02, 2024 12:39 AM
தேனாம்பேட்டை, பிறந்த நாளன்று 'கேக்' வெட்டி கொண்டாடி விட்டு வீடு திரும்பிய, 60 வயது முதியவர், சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். இவர் சென்னை, தி.நகர், வெங்கட்நாராயணா சாலையிலுள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம், சேதுராமனுக்கு 60வது பிறந்த நாள் என்பதால், வேலை பார்க்கும் இடத்தில் ஊழியர்களுடன் 'கேக்' வெட்டி, தன் பிறந்த நாளை கொண்டாடினார்.
பின் அவர், பேருந்தில் பயணம் செய்ய, இரவு 9:00 மணியளவில் நடந்து சென்றார். நந்தனம் தேவர் சிலை அருகே வரும்போது, அவர் திடீரென சுருண்டு விழுந்தார்.
நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த அங்கிருந்தோர், ஆம்புலன்சை வரவழைத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
தகவலின்படி வந்த தேனாம்பேட்டை போலீசார், சேதுராமனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பிறந்த நாள் அன்று முதியவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

