ADDED : ஆக 08, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 60. பரங்கிமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தவர், நேற்று முன்தினம் இரவு, பால்வெல்ஸ் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த 'எய்ச்சர்' வாகனம், அவர் மீது மோதி, நிற்காமல் சென்றது. துாக்கி வீசப்பட்ட அவரின் பின்தலை, கைகள் காயமடைந்து, அதே இடத்திலேயே இறந்தார்.
பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.
விபத்து ஏற்படுத்தி தலைமறைவான, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மணிகண்டன், 28, என்பவரை தேடுகின்றனர்.